திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, அரசுப் பேருந்தின் முன் பக்க சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி பேருந்து நிலையத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, தீர்த்த கவுண்டர் வலசு கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது.
அமர பூண்டி அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது. ஓட்டுநர் சாமார்த்தியமாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.