தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற அகில இந்திய ஹாக்கி போட்டியில் போபால் அணி அபார வெற்றி பெற்றது.
செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி 16 அணிகளுடன் கடந்த மாதம் தொடங்கியது. ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று வந்த இந்த போட்டியின் இறுதி சுற்றில் போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும், புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் மோதின.
ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 3 – 1 என்ற கோல் கணக்கில் போபால் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதையடுத்து 2ம் இடத்தை பிடித்த புவனேஸ்வர் அணிக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.