மும்பையில் சிக்ஸர் அடித்த அடுத்த நொடியில் இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மும்பை மீராடு ரோடு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய போது, இளைஞர் ஒருவர் சிக்ஸர் அடித்தார்.
அதற்கு அடுத்த நொடியே அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்துவிழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இருப்பினும், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.