பெரம்பலூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பொதுப்பார்வையாளர் ராஜேந்திர குமார் வர்மா ஆய்வு நடத்தினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணி நடைபெற உள்ள நிலையில், பெரம்பலூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு கருவிகள் உள்ளிட்ட அனைத்தும் தனியார் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் பொதுப்பார்வையாளர் ராஜேந்திரகுமார் வர்மா நேரில் ஆய்வு நடத்தினார்.
அதில் வாக்கு எண்ணுவதற்கு அமைக்கப்பட்டுள்ள அனைத்து மேசைகளுக்கும் தனி தனி சி.சி.டி.வி கேமராக்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இதையடுத்து அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.