புதுக்கோட்டை திருவப்பூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் தாங்கள் பயின்ற பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆசிரியர் ஒருவர், குழந்தைகள் தங்களுக்கு பிடித்த பாடத்தை தேர்வு செய்ய பெற்றோர்ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.