சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே டிவி வெடித்து, வீடு தீப்பற்றி எரிந்ததில் தங்க நகை, ரொக்க பணம் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
காளையார்கோவில் அருகே மறவமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமன் வீட்டில், தமிழக அரசின் இலவச டிவி திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர்.
இந்நிலையில் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பற்றி எரிந்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் தங்க நகை, ரொக்க பணம் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தீ விபத்து குறித்து காளையார் கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.