வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் திமுக கொடிகள் கட்டப்பட்டிருப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி வாக்கு மையத்தில் நடைபெறும் முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, எட்டரை மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என தெரிவித்தார்.
அரசியல் கட்சி முகவர்களுக்கு என தனியே நுழைவுப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் திமுக கொடிகள் கட்டப்பட்டிருப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.