28 மக்களவை தொகுதிகளை கொண்ட கர்நாடகத்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகத்தில் பாஜக 5 தொகுதிகளில் இதுவரை வெற்றி பெற்று கணக்கைப் பதிவு செய்துள்ளது.
முன்னாள் முதல்வரும், பாஜக வேட்பாளருமான பசவராஜ் பொம்மை, ஹவேரி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
ஷிமோகா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் பி.ஒய். ராகவேந்திரா 7 லட்சத்து 78 ஆயிரத்து 721 வாக்குகள் வெற்றி பெற்றுள்ளார்.
பெங்களூரில் 2 தொகுதிகள் உள்பட 13 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் குமாரசாமி, மாண்டியா தொகுதியில் 8 லட்சத்து 51 ஆயிரத்து 881 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 9 தொகுதிகளில் களம்கண்ட காங்கிரஸ், ஒரு தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்தது. 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.