மயிலாடுதுறையில் பாஜகவினர் வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடைபெற்று முடிந்த 18-வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.