பொது மக்களையும், கட்சி தொண்டர்களையும் துன்புறுத்திய அதிகாரிகளை விட்டு வைக்க மாட்டோம் என நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் மங்களகிரி தொகுதியில் போட்டியிட்டு சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் வெற்றிபெற்றார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பழிவாங்கும் அரசியலில் தாங்கள் ஈடுபட மாட்டோம் எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ஆந்திராவில் பாதயாத்திரையாக சென்றபோது பொதுமக்களையும், தொண்டர்களையும் துன்புறுத்திய அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.