பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து, நம்பர் 1 வீரரான ஜோகோவிச் விலகியுள்ளார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 4-வது சுற்றில் போராடி வெற்றிப்பெற்ற நடப்பு சாம்பியன் ஜோகோவிச் இன்று காலிறுதியில் கேஸ்பர் ரூட்டுடன் விளையாட இருந்தார்.
ஆனால் அவரது காயத்தன்மை தீவிரமாக இருந்ததால், ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகியுள்ளார்.