மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 23 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, இந்த முறை ஒன்பது தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்தப் பின்னடைவுக்கு பொறுப்பு ஏற்று துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தேவேந்திர பட்னாவீஸ் முடிவு செய்திருப்பதாகவும், மீண்டும் கட்சிப் பணிக்குத் திரும்ப அவர் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
















