நாடாளுமன்ற தேர்தலில் தேர்வாகாவிட்டாலும் நீலகிரியை தனது தொகுதியாக கருதி தொடர்ந்து பணியாற்றுவேன் என அத்தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் 3-வது முறையாக ஆட்சியமைக்கும் மகிழ்ச்சியான தருணம் இது எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் அரசின் அதிகார பலம், பண பலம், அரசியல் சூழ்ச்சியை முறியடித்த பாஜக தலைமையிலான கூட்டணி, வெற்றியை ஈட்டாவிட்டாலும் அசைக்க முடியாத சக்தி என்பதை வாக்குகள் மூலம் நிருபித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
தமிழக மக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தேர்வாகாவிட்டாலும் நீலகிரியை எனது தொகுதியாக கருதி தொடர்ந்து பணியாற்றுவேன் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.