பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் நிலையான அரசு அமையும் என கர்நாடகா பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
என்டிஏ கூட்டணியில் பொறுப்புமிக்க கட்சிகள் அங்கம் வகிப்பதாகவும், அந்த கட்சிகளை தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் மோடி வழி நடத்துவார் என்றும் கூறினார். முந்தைய ஆட்சியை விட என்டிஏ 3.0 பலம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் அவர் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.