தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கபிஸ்தலம் வன்னியடி கிராமத்தை சேர்ந்த மருதப்பன் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்துடன் உறவினரின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இதனை நோட்டமிட்டு இளைஞர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, 4 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராம்குமார் என்பவரை பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது திருடியது உறுதியானதையடுத்து ராம்குமாரை கைது செய்த போலீசார், திருடுபோன நகை மற்றும் பணத்தை மீட்டனர்.