பிரேசிலில் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்தனர்.
பிரேசிலின் மினாஸ் ஜெராயிஸ் மாகாணத்துக்கு உட்பட்ட கவர்னடார் வாலடேர்ஸ் நகரில் இருந்து சான்டா கேட்டரினா தலைநகர் புளோரியானோ பொலிஸ் நகர் நோக்கிச் சென்ற விமானத்தை இடாப்போ விமான நிலையத்தில் தரையிறக்க விமானி அனுமதி கோரினார்.
இதையடுத்து, அந்த விமானம் தரையிறங்க அனுமதி கிடைத்தது. ஆனால், விமான நிலையத்தை தாண்டி வனப்பகுதியில் திடீரென அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது.
இதில் விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.