மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தக்க வைத்திருப்பது பெரும் சாதனை! - வானதி சீனிவாசன்
Sep 13, 2025, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தக்க வைத்திருப்பது பெரும் சாதனை! – வானதி சீனிவாசன்

Web Desk by Web Desk
Jun 5, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தக்க வைத்திருப்பது பெரும் சாதனை எனத் தேசிய மகளிரணி தலைவரும்  பா.ஜ.க. கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைத்திருப்பது வரலாற்று வெற்றி.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 240 இடங்களிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.

இந்த வெற்றி என்பது சாதாரணமானது அல்ல. வரலாற்று வெற்றி சுதந்திர இந்தியாவின் 77 ஆண்டுகளில், நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவால் மட்டுமே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முடிந்தது.

இந்திய அரசியலில் 17 ஆண்டுகள் பெரும் செல்வாக்குடன் வலம் வந்த இந்திரா காந்தியால் கூட தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை. 1977 மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி, தான் போட்டியிட்ட தொகுதியிலேயே தோற்றுப் போனார்.

இந்திரா மறைவுக்குப் பிறகு 1984-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 400-க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்த ராஜிவ் காந்தியால், இரண்டாவது முறை ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு நடந்த 1991 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 244 இடங்களே கிடைத்தன. பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும் நரசிம்மராவ் தலைமையில் 5 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆட்சி நடந்தது.

1989-ல் இருந்து இந்தியாவில் கூட்டணி ஆட்சிக் காலம் தொடங்கியது. 2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முதல் நாள் வரைகூட, இனி இந்தியாவில் கூட்டணி ஆட்சி தான். எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது” என்றே அனைவரும் நம்பினார். ஆனால், 2014-ல் 282, 2019-ல் 303 என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது.

1984 அதாவது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சி அமைத்தது அதுவே முதல்முறை.

1962-க்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ள
பாஜக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு முழுமையாக நல்லாட்சியை வழங்கும். ஏனெனில்
கூட்டணி ஆட்சியை வழிநடத்துவதில் பாஜகவுக்கு நீண்ட அனுபவம் உள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக 20-க்கும் அதிகமான கட்சிகளுடன் கூட்டணி ஆட்சியை முழுமையாக 5 ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக நடத்தியது பாஜக தான். அதன் பிறகு தான் இந்தியாவில் கூட்டணி ஆட்சியை முழுமையாக ஐந்து ஆண்டுகளுக்கும் நடத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

1999-ல் கூட்டணி ஆட்சியை வாஜ்பாய் வெற்றிகரமாக நடத்தியபோது பாஜக பெற்ற இடங்கள் 182 மட்டுமே. ஆனால், இப்போது பாஜகவுக்கு மட்டுமே 240 எம்பிக்கள் உள்ளனர். அதுவும் 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சிக்குப் பிறகு. எவ்வளவு பெரிய சாதனை.

96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியை தக்க வைப்பதே பெரும் சாதனை. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக 100-ஐ தொட முடியவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த இடங்களை விட, பாஜக மட்டுமே பெற்ற இடங்கள் அதிகம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மையை விட 20 இடங்கள் அதிகமாக கிடைத்துள்ளது.

இந்த வரலாற்று வெற்றியை எதிர்க்கட்சிகளும், சில ஊடகங்களும், நடுநிலையாளர் போர்வையில் பாஜகவை மட்டும் எதிர்ப்பவர்களும், பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி என்பதைப் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர் ஊடகங்களில் அவ்வாறே விவாதங்கள் நடக்கின்றன. ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மைக்கும் தேவையான இடங்களை தாண்டி வெற்றி பெற்றிருப்பது பெரும் சாதனை. வரலாற்று வெற்றி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: It is a great achievement for the BJP to retain power for the third time! - Vanathi Srinivasan
ShareTweetSendShare
Previous Post

3வது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

Next Post

புனே கார் விபத்து: 5 பேரின் போலீஸ் காவல் நீட்டிப்பு!

Related News

அமெரிக்கா : பனிப் பாறையில் இருந்து கீழே விழுந்த பனிச்சறுக்கு வீரர் மீட்பு!

அரையிறுதிக்கு முன்னேறிய சாத்விக் – சிராக் இணை!

தேனி : முறையாக சிகிச்சை அளிக்காமல் ஒரே நாளில் வெளியேற்றிய மருத்துவர்கள்!

குஜராத் : ரூ.2.38 கோடி மதிப்பிலான மதுபான பாட்டில்கள் அழிப்பு!

சேலம் : 12 வயது சிறுவனை கடித்த வளர்ப்பு நாய்!

ரஷ்யா : 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மக்கள்தான் கடவுள் – அவர்கள் இல்லையெனில் நான் இல்லை – வடிவேலு

30 நாடுகளில் காந்தாரா 2 படத்தை திரையிட படக்குழு திட்டம்!

கோவை மலையப்ப சுவாமி திருவீதி உலா – பக்தர்கள் தரிசனம்!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அதிகரித்த இந்தியா!

ஈக்வடார் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்!

திண்டுக்கல் : பசுமையை வலியுறுத்தி மழலையர்கள் பேரணி!

இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது – இலங்கை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

பாலி தீவில் பெருவெள்ளம்!

அனுபமா பரமேஸ்வரன் நடித்த பரதா படம் ஓடிடியில் வெளியீடு!

டெல்லி : எதிரிகள் போல சண்டையிட்டுக் கொண்ட வழக்கறிஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies