புனேயில் கார் ஏற்றி 2 பேரை சிறுவன் கொலை செய்த விவகாரத்தில், அவனது பெற்றோர் உள்பட 5 பேரின் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதியதில், ஐடி ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.
சிறுவனை காப்பாற்ற முயன்ற அவனது பெற்றோர், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 3 பேர் என கைதான 5 பேரின் போலீஸ் காவல் நிறைவடைந்தது.
அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது சிறுவனின் பெற்றோருக்கு ஜூன் 10-ஆம் தேதி வரையும், 3 மருத்துவர்களுக்கு ஜூன் 7-ஆம் தேதி வரையிலும் போலீஸ் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.