மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று 3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்தியாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைப்பது, பிரதமர் மோடியின் மீது நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி, சாதனை படைத்த பிரதமரின்
நேர்மையான மற்றும் ஊழலற்ற ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு மோடி அவர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.