டெல்லிக்கு தண்ணீர் திறக்க இமாச்சல பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வட மாநிலங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், டெல்லியில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இந்நிலையில் தண்ணீர் திற்கக இமாச்சல பிரதேச அரசுக்கு உத்தரவிடக்கோரிஅமைச்சர் ஆதிஷி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் டெல்லிக்கு 137 கன அடி நீர் திறக்க ஹிமாச்சல் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உபரிநீரை இதனை ஹரியானா அரசு முறையாக டில்லிக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், டில்லிக்கு வழங்கப்படும் நீரை எக்காரணம் கொண்டும் தடுத்து வைக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குடிநீரை வீணாகாத வகையில் டில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.