மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியிலேயே முதன்முறையாக சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது என ராகுல் காந்திக்கு பாஜக மூத்த தலைவர் பியூஸ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளால் பங்குச்சந்தையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பாஜக மூத்த தலைவர் பியூஸ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 79 சதவீதத்திலிருந்து 84 சதவீதமாக இருந்த மியூச்சுவல் ஃபண்ட் துறையின் அளவு, தற்போது 5 மடங்கு அதிகமாகி 56 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.
அத்துடன், இந்தியாவின் சந்தை மதிப்பும் 67 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, தற்போது 415 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது எனவும் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
மேலும், இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உருவான நிலையில், தேர்தல் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத ராகுல், சந்தை முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்த சதி செய்வதாக அவர் குற்றம்சாட்டினார்.