ஆந்திர மாநில முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு வரும் 12-ம் தேதி பதவியேற்கிறார்.
ஆந்திர பிரதேசத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில், 135 இடங்களில் வெற்றி பெற்று தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
கூட்டணிக் கட்சிகளான ஜன சேனா 21 இடங்களிலும், பாஜக 11 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆளுங்கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சந்திரபாபு வரும் 12-ம் தேதி பதவியேற்கிறார். இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழா அமராவதியில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.