ஒடிசா மாநிலத்தின் முதல் பாஜக முதலமைச்சர் வரும் 10-ம் தேதி பதவியேற்கவுள்ளார். இவ்விழாவில், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
147 இடங்களைக் கொண்ட ஒடிசா சட்டப்பேரவையில் 78 இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.
24 ஆண்டுகளாக ஒடிசாவில் ஆட்சியமைத்த பிஜூ ஜனதா தளம் இம்முறை 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒடிசாவின் முதல் பாஜக முதலமைச்சர் வரும் 10-ம் தேதி பதவியேற்கவுள்ளார்.
இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா, மூத்த தலைவர்கள் சுரேஷ் பூஜாரி, மோகன் மாஜி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.