தமிழகத்தில் இன்று கனமழை பெய்வதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி, கேரளா, உள் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை அடுத்த 3 தினங்களில் மத்திய அரபிக் கடல் மற்றும் வடமேற்கு வங்கக் கடலின் சில பகுதிகளில் முன்னேறுவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் வரும் நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும், கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று கனமழை பெய்வதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வ மையம் விடுத்துள்ளது.