தேசிய ஜனநாயகக் கூட்டணி தோற்கவும் இல்லை, தோற்கப்போவதும் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய ஜனநாயக எம்பிக்கள் குழு தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது பேசிய அவர்,
புதிய எம்பிக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். வெற்றிக்காக பாடுபட்ட அனைவரையும் தலை வணங்குவதாகவும் பிரதமர் கூறினார்.
22 மாநிலங்களில் ஆட்சி அமைக்கவும், பணியாற்றவும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளதாகவும், இதுதான் இந்திய ஜனநாயகத்தின் வலிமை என்றும் கூறினார்.
தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என தெரிவித்த அவர், புதிய பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் பிரதமர் கூறினார்.
தமிழகத்தில் இருந்து எம்பிக்கள் கிடைக்காத போதும் அங்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வாக்களித்த தமிழர்களுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.
தாங்கள் தோற்கவும் இல்லை தோற்கப்போவதும் இல்லை என்றும் பிரதமர் தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு பின்னரும் காங்கிரசால் 100 தொகுதிகளில் கூட வெல்ல முடியவில்லை என்றும் மோடி தெரிவித்தார்.
தெலுங்கானா, ஆந்திராவில் மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்து விட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். பொய்யான வாக்குறுதிகள் அளித்து வாக்காளர்களை தவறாக காங்கிரஸ் வழி நடத்தியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.