கர்நாடகா பாஜக சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று பெங்களூரூ சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அப்போது 2019-2023 காலகட்டத்தில் பாஜக அரசு உழலில் ஈடுபட்டதாக நாளிதழ்களில் விளம்பரம் வெளியானது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே.சிவக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக பாஜக நிர்வாகி சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சித்தராமையா மற்றும் டிகே.சிவக்குமார் ஜுன் ஒன்றாம் தேதி ஆஜராகினர். அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ராகுல் காந்தி ஆஜராகாததால் ஜூன் 7ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பெங்களூரூ சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜரானார். அவருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.