போடிநாயக்கனூரில் பூத்து குலுங்கிய பிரம்ம கமலம் பூக்களுக்கு கற்பூர் காண்பித்து பக்தி பரவசத்துடன் பொதுமக்கள் வழிபட்டனர்.
பிரம்ம கமல பூக்கள் என்பது இமயமலை சாரல்களில் பனி படர்ந்த பகுதிகளில் அதிகம் பூத்துக் குலுங்கும் மலராகும்.
பிரம்மனுடைய நாபி கமலத்திலிருந்து உருவான பூ என்று கூறப்படுவதால், இந்தப் பூவின் உட்புறத்தில் பல நாகங்கள் உள்ளது போலவும், பிரம்மன் அமர்ந்திருப்பது போலவும் காட்சி அளிக்கிறது.
ஆண்டிற்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூத்து சிறப்பான நறுமணம் வீசும், இந்த பூக்கள் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் பூத்துள்ளது. குலாலர்பாளையம் பகுதியில் வசிக்கும் ஈஸ்வரன் என்பவர் வீட்டில் பூத்து குலுங்கிய இந்தப் பூக்களுக்கு அப்பகுதி மக்கள் கற்பூரம் ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர்.