நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலை தோட்டப் பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித் திரியும் சிறுத்தையை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
பொன்வயல் அருகே உள்ள காப்பி தோட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சிறுத்தை ஒன்று காலில் காயத்துடன் நடமாடி வருகிறது.
சரிவர நடக்க முடியாமல் சிறுத்தை தோட்டத்தில் பதுங்கி உள்ளதால், அதற்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில், வனத்துறையினர் தேடி வருகின்றனர். சிறுத்தை பிடிபடும் வரை தேயிலை தோட்டத்துக்கு கிராம மக்கள் செல்ல வேண்டாமென வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.