கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில் நிலைய நடைமேடை அருகே ஆணின் ஒரு கால் மட்டும் துண்டாகி கிடந்ததால் பரபரப்பு நிலவியது.
மற்றொரு கால் கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி இருப்புப் பாதையில் கிடப்பதாக விருத்தாசலம் இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த கால்கள் யாருடையது, அந்த நபர் எப்படி விபத்தில் சிக்கினார் என்பது குறித்து விருத்தாசலம் இருப்பு பாதை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.