ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இந்திய கடற்படை விமானத் தளத்தில், 102-ஆவது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
இங்கு, 22 வார பயிற்சியை நிறைவு செய்த ஒரு பெண் உட்பட 21 பேருக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
இதில், கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கடற்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, பயிற்சியில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.