கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை வைத்து ஆட்டின் தலையை வெட்டிய சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் எம்.நாகராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் கலந்து கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.