கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி மலை கிராமத்தில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த முயல்களை கொன்ற காட்டு பூனையை வனத்துறையினர் பிடித்து அடர் வனப்பகுதியில் விட்டனர்.
பத்துகாணியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வீட்டில் ஏராளமான முயல்களை வளர்த்து வருகிறார். அவற்றில் சில காணாமல் போனதால் சந்தேகமடைந்த அவர் வனத்துறையிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து மணிகண்டன் வீட்டில் வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்தபோது காட்டு பூனை ஒன்று முயலை தேடி வந்து கூண்டில் சிக்கிக்கொண்டது.