தென்மேற்கு பருவமழை பெய்துவரும் நிலையில் கேரளாவில் உள்ள பாலருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
ஆரியங்காவு பகுதியில் அமைந்துள்ள பாலருவி நீர்வீழ்ச்சி பகுதியில் பராமரிப்புப் பணி காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வனத்துறை அனுமதி வழங்கியதை அடுத்து, சுற்றுலாப்பயணிகள் பாலருவியில் குளித்து மகிழ்ந்தனர். வனப்பகுதிக்குள் நெகிழி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்த செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.