புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தென்பாதி பகுதியை சேர்ந்த மூதாட்டி சாத்தியம்மாள், குளத்தில் குளிக்க சென்றபோது, மர்ம நபர்கள் அவரை கொலை செய்துவிட்டு 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடிவந்த நிலையில், முஹாசிரின் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து நகைகளை மீட்டனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடையவர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.