கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திருமுதுகுன்றம் சேக்கிழார் செந்தமிழ் சங்கத்தின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 23-ஆம் ஆண்டு குருபூஜை விழா மங்கல இசையுடன் தொடங்கியது.
சேக்கிழார் செந்தமிழ்ச் சங்க கைலாய வாத்திய தலைவர் சித்தாந்த ரத்தினம் முத்துக்குமரன் தலைமை அறங்காவலர் செல்விமுருகன் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து விருத்தகிரீஸ்வரர் கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்து தெய்வச்சேக்கிழார் குரு பூஜை மற்றும் திருவீதி உலா நடைபெற்றது. மேலும், சிவனடியார் கூட்டம் சார்பில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.