நீலகிரியில் கராத்தே போட்டியில், பிளாக் பெல்ட்டுக்கு தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளை காவல்துறை அதிகாரி பாராட்டி பரிசு வழங்கினார்.
கோத்தகிரியில் கடந்த 2-ம் தேதி முதல் மாநில அளவிலான பிளாக் பெல்ட் தேர்வுக்கான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 29 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பிளாக் பெல்ட்டுக்கு தேர்வு பெற்ற மாணவ மாணவிகளுக்கும், பயிற்சி அளித்த வெங்கடேஸ்வரனுக்கும், கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.