சென்னை, திருவொற்றியூரில் சிவகெங்கை அம்மன் ஆலய திருவிழாவை ஒட்டி பிரம்மாண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் திருவிழாவை ஒட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து விரதம் இருந்த பெண்கள் கூழ்வார்த்தல் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் என நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பின்னர் உலக நன்மை வேண்டி 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.