பெரம்பலூர் அருகே திரவுபதி அம்மன் கோயில் விழாவில், முறத்தால் அடிக்கும் வினோத விழா நடைபெற்றது.
பிரம்மதேசம் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலின் திருவிழா கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து ஒவ்வொரு நாட்களும் சிறப்புப் பூஜைகள் நடபெற்ற நிலையில், திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையடுத்து அங்குள்ள ஏரிக் கரையில் அர்ச்சுனன் மாடு திருப்புதல் விழாவும், முறத்தால் பக்தர்கள் அடி வாங்கும் வினோத விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற் சுவாமி தரிசனம் செய்தனர்.