வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மலைக்கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு விபூதி காப்பு, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மலை அடிவாரத்தில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் வள்ளியம்மைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
மேலும், கீழ் கோயிலில் உள்ள மூலவர்கள், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.