திமுகவின் தோளில் ஏறிப் பயணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவை விமர்சனம் செய்ய தார்மீகத் தகுதியில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
நாட்டின் பிரதமராக 3-வது முறையாக மோடி நாளை பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி செல்வதற்கு முன், தெலங்கானா முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டிருந்தால் டெபாசிட் கூட வாங்கியிருக்காது என்று குறிப்பிட்டார்.
திமுகவின் தோளில் ஏறிப் பயணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவை விமர்சனம் செய்ய தார்மீகத் தகுதியில்லை என விமர்சித்தார்.