டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதா மீது சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுப்பதா என்பது குறித்து டெல்லி நீதிமன்றம் வரும் ஜூலை 6-ம் தேதி முடிவு செய்யவுள்ளது.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தனது இறுதியறிக்கையை தாக்கல் செய்த நிலையில், வழக்கின் விசாரணை ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் கவிதாவின் நீதிமன்ற காவலை வரும் 21-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.