பாஜக எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அவர் மீது மொஹாலி போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், குல்விந்தர் கவுர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சிஐஎஸ்எஃப் டிஐஜி வினய் கஜ்லா தெரிவித்துள்ளார்.