சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் நடனமாடியபடி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், ‘போயிங்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘ஸ்டார்லைனர்’ விண்கலம் மூலம் சக விண்வெளி வீரரான பேரி வில்மோருடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தார்.
அப்போது அங்கிருந்த சக விண்வெளி வீரர்களை பார்த்த மகிழ்ச்சியில் சுனிதா வில்லியம்ஸ், உற்சாகமாக நடனமாடினார்.