திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இருசக்கர வாகனம் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் தங்களது வாகனத்தை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில், ஏற்கனவே ஒரு இருசக்கர வாகனம் திருடு போன நிலையில், 2-வது நாளாக ஒரு இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் திருடி சென்றுள்ளனர். புகாரின் பேரில், போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.