செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 9 மாடுகள் உயிரிழந்தன.
பையனூர் ஊராட்சியில் இடியுடன் கூடிய பெய்த மழையினால் மின்கம்பி ஒன்று அறுந்து வேலியில் மீது விழுந்துள்ளது.
சாலையில் சுற்றித்திரிந்த கன்றுக்குட்டி உள்பட ஒன்பது மாடுகளும் வேலியை தாண்டியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.