திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தம் அருகே அரசு பள்ளிக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை 2 கிலோமீட்டர் தொலைவிலேயே லாரி ஓட்டுநர்கள் இறக்கிவைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிட்டபையனூர், லட்சுமிபுரம், நந்திபெண்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் உணவுபொருட்கள் வழங்கப்படுகிறது.
ஆனால், உணவுபொருட்களை பள்ளி வளாகத்தில் இறக்காமல், இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே லாரி ஓட்டுநர்கள் இறக்கிவிட்டு செல்கின்றனர். இதனால், காலை உணவு திட்டப் பணியாளர்கள் உணவு பொருட்களை எடுத்துவர சிரமம் ஏற்பட்டுள்ளது.