தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 10 நாட்களுக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவந்திப்பட்டி ஊராட்சி கரிசல்குளம் கிராமத்தில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அந்தப் பகுதி மக்கள் கோவில்பட்டி – பசுவந்தனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.