திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 22 கிலோ கஞ்சா கடத்தியதாக சென்னை அசோக் நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.