ராமோஜி பிலிம் சிட்டி குழும தலைவர் ராமோஜி ராவின் மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ராமோஜி ராவின் மறைவால் இந்திய ஊடகம் மற்றும் திரைப்படத்துறை தலைசிறந்த இடத்தை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதுமையான தொழில்முனைவோரான அவர், ஈநாடு நாளிதழ் ஈடிவி நெட்வொர்க் மற்றும் ராமோஜி பிலிம் சிட்டி உள்ளிட்ட பல முயற்சிகளுக்கு முன்னோடியாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு நீண்ட காலமாக நினைவுகூரப்படும் என்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.