ராமோஜி பிலிம் சிட்டி குழும தலைவர் ராமோஜி ராவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“ராமோஜி ராவ் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம் கொள்கிறேன். தொலைநோக்கு மிக்க தலைவரான அவரது பாரம்பரியம் இந்திய ஊடகங்கள் முழுவதும் எதிரொலிக்கிறது.
மாற்றத்தை ஊக்குவிக்கும் அவரது தலைமைத்துவம், பத்திரிகை மற்றும் திரைப்படத் துறையை மறுவடிவமைத்து, புதுமை மற்றும் சிறப்பான தரத்தை நிலைநிறுத்தியது.
அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற அபிமானிகளுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.